welcome

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

எனது கிறுக்கல்களை படித்து விட்டு

உங்கள் கருத்துக்களை சொல்ல
மறந்து விடாதீர்கள்!

நன்றி!
மீண்டும் வருக!

புதன், 15 பிப்ரவரி, 2012

கவனம் தேவை!


கவனம் தேவை! 
வங்கிகள்.. மற்றும் பணம் மாற்றும் இடங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமாக பணம் பெறும்போதும் கவனம் தேவை!

*நமக்கு தரப்படும் பணம் ஐநூறு ,, ஆயிரமாக கொடுக்கப்பட்டால் விரைவாக எண்ணி சரி பார்த்துக்கொண்டு வந்து விடலாம்!
ஆனால் சில காசாளர்கள் நூறு ரூபாய் கட்டுகளை தயாராக வைத்திருப்பார்கள்!

*அவசரத்தில் இருப்பவர்களுக்கு இந்த நூறு ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்து விடுவார்கள்! அதில் நூறு நோட்டிற்கு பதில் தொண்ணூற்று ஒன்பது நோட்டு தான் இருக்கும்!

*மிக நேர்த்தியாக ஒரு நோட்டை உருவி விட்டு நம்மிடம் கொடுத்து விடுவார்கள்! ஓரத்தில் நின்று இரண்டு தடவை எண்ணிய பிறகு அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு தடவை எண்ணி விட்டு அந்த நோட்டுக்கட்டை "வைத்துக்கொண்டு" நமக்கு வேறு ஐநூறு, ஆயிரம் என்று தனியாக எண்ணிக கொடுப்பார்கள்! ஏனென்றால் வேறு "இழிச்சவாயர்களிடம்" கொடுப்பதற்காக அதை வைத்துக்கொள்வார்கள்!

பல இடங்களில் இது போல் நடக்கிறது!

எனவே கொஞ்சம் பொறுமையாக பணத்தை எண்ணி.. சரி பார்த்துக்கொண்டு வெளியே வருவது நல்லது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக