welcome

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

எனது கிறுக்கல்களை படித்து விட்டு

உங்கள் கருத்துக்களை சொல்ல
மறந்து விடாதீர்கள்!

நன்றி!
மீண்டும் வருக!

சனி, 3 மார்ச், 2012

Mazai meethu Kaadhal! Un Meethu Natpu ^ ^


மழையை எனக்கு ரொம்ப பிடிக்கும்!
மழை மீது காதல் என்று கூட சொல்லலாம்!
உன்னையும் எனக்கு ரொம்ப பிடிக்கும்! 
அதை முழுமையாக அறிந்துகொண்ட 
"நட்பு" என்று சொல்லலாம்! 

ஒரு முறை
மழை நாளில்
நீ மழையில்
நனைவதை பார்த்தேன்!

"நட்பு, காதலில்
நனைகிறது" - என்ற
கவிதையை பிடித்தேன்!

Kannaadi >>>


முகம் பார்க்கும் கண்ணாடி 
பலரின் - முழுமையையும் 
வாழ்நாளில் ஒரு முறையாவது 
பார்த்து விடுகிறது!

சனி, 18 பிப்ரவரி, 2012

வாழ்க்கை!


வாழ்க்கை! 

எதை எல்லாம் நடக்கக்கூடாது 
என்று எண்ணுகிறாயோ...
அதெல்லாம் நடப்பது தான் 
வாழ்க்கை! 

புதன், 15 பிப்ரவரி, 2012

பாட்டியின் பஞ்சு போன்ற தலை முடி!

என் பாட்டியின் 
வெண் பஞ்சு போன்ற 
தலை முடியை 
லேசாக தடவிக்கொடுப்பதில் 
பாட்டிக்கு சந்தோஷமும்.. 
எனக்கு நிம்மதியும் 
கிடைக்கிறது! 
(படத்தில் இருப்பது என் பாட்டி இல்லை ! 
நெட் பாட்டி! :)...)

♥♥♥ Valentine Kirukkalgal ♥♥♥

எல்லாவற்றிலும் 
எனக்கு பிடித்ததையே...
நீ தேர்ந்தெடுத்தாய்!
உனக்கு பிடித்ததையே 
நான் தேர்ந்தெடுத்தேன்!
அதனால் தான் 
காதல் நம்மை 
தேர்ந்தெடுத்திருக்கிறது!

கவனம் தேவை!


கவனம் தேவை! 
வங்கிகள்.. மற்றும் பணம் மாற்றும் இடங்களில் பத்தாயிரத்திற்கும் அதிகமாக பணம் பெறும்போதும் கவனம் தேவை!

*நமக்கு தரப்படும் பணம் ஐநூறு ,, ஆயிரமாக கொடுக்கப்பட்டால் விரைவாக எண்ணி சரி பார்த்துக்கொண்டு வந்து விடலாம்!
ஆனால் சில காசாளர்கள் நூறு ரூபாய் கட்டுகளை தயாராக வைத்திருப்பார்கள்!

*அவசரத்தில் இருப்பவர்களுக்கு இந்த நூறு ரூபாய் கட்டு ஒன்றை கொடுத்து விடுவார்கள்! அதில் நூறு நோட்டிற்கு பதில் தொண்ணூற்று ஒன்பது நோட்டு தான் இருக்கும்!

*மிக நேர்த்தியாக ஒரு நோட்டை உருவி விட்டு நம்மிடம் கொடுத்து விடுவார்கள்! ஓரத்தில் நின்று இரண்டு தடவை எண்ணிய பிறகு அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் ஒரு தடவை எண்ணி விட்டு அந்த நோட்டுக்கட்டை "வைத்துக்கொண்டு" நமக்கு வேறு ஐநூறு, ஆயிரம் என்று தனியாக எண்ணிக கொடுப்பார்கள்! ஏனென்றால் வேறு "இழிச்சவாயர்களிடம்" கொடுப்பதற்காக அதை வைத்துக்கொள்வார்கள்!

பல இடங்களில் இது போல் நடக்கிறது!

எனவே கொஞ்சம் பொறுமையாக பணத்தை எண்ணி.. சரி பார்த்துக்கொண்டு வெளியே வருவது நல்லது!

வெட்டப்பட்ட மரம்! வீழ்த்தப்பட்ட உயிர்கள்!

வெட்டப்பட்டது மரங்கள் மட்டுமல்ல!
சில உயிர்களின் உறைவிடங்களும்!

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

யார் கண்டார்கள்?

யார் கண்டார்கள்? 

கடற்கரையில் காதலியுடன் 
கடலை போட்டுக் கொண்டிருக்கும்போது 
கடலை விற்கும் பொடியனின் 
நக்கல் சிரிப்பிற்க்குப்பின்னால் 
பல அர்த்தங்கள் இருக்கலாம்! 
யார் கண்டார்கள்?

ஒரு காதல் போதும்!

ஒரு காதல் போதும்!


உண்மையாக நேசித்து 
ஏமாற்றப்பட்ட இதயத்திற்கு 
வாழ்நாள் முழுவதும் 
அந்த ஒரு காதலே போதும்!

Kangalai Vaangikkondu Kangal Tharubaval!


செவ்வாய், 31 ஜனவரி, 2012

தன்னம்பிக்கையின் தைரிய சின்னம்!


கால்களில் தான் ஊனம்! 
மனசில் இல்லை! 
உடம்பில் குறை இருந்தால் 
வருத்தப்படாதீர்கள்!

நிறைவாக இருக்கும் 
மற்றவைகளை நினைத்து 
சந்தோஷப்படுங்கள்!

வாழ்க்கையில் கூட 
இல்லாததை நினைத்து 
வருந்துவதை விட 
இருப்பதை சிறப்பாக 
ஆக்குவதே சிறந்தது!

படத்தில் இருக்கும் மனிதர் 
தன்னம்பிக்கையின் 
தைரிய சின்னம் ..:)

தெளிவான மனது!


செவ்வாய், 3 ஜனவரி, 2012

மொக்கை பிகர் >>>


எரித்து விடு >>>


சேவாக் அடித்த 219 ரன்கள்!


புதிய பூ >>>


தன்னம்பிக்கை..தைரியத்தை இழந்துவிடாதே!


அடக்கமான பெண்கள் ...நிமிர்ந்து பார்க்காமலே... ஆண்களை கவர்கிறார்கள்!


எப்போதோ நடந்த சோகங்களை நினைத்து ...அவ்வப்போது வருந்தாதீர்கள்!


பாலைவனத்திலும் அழகை படைத்திருக்கிறான் இறைவன்!


எதார்த்தம்!